10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,361 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,306 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.06 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.18 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 75.84 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!