பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சினிமா தயாரிப்பாளர் வீட்டிலும் தொழிலதிபர்கள் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பல கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக, முக்கிய தொழிலதிபர்கள் வீடுகளிலும் இன்று(மே 16) காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: 'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்