வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தி...
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியானது.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பாளையங்கோட்டை சிறைக் கைதி சக்திவேல் மற்றும் சேலம் சிறைக் கைதி கோபி ஆகிய இருவரும் அதிகபட்சமாக 412 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: '2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்