காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!
``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!
உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் பகதுர்புர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மாயா(50). இவரது கணவர் தேவேந்திர குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
மாயா கடந்த 10-ம் தேதி தனது கணவரை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் அங்குள்ள கரீட் என்ற கிராமத்தில் தேவேந்திர குமார் உடலின் ஒரு பகுதி கிடைத்தது. உடம்பில் இருந்து தலை துண்டித்து எடுக்கப்பட்டு இருந்தது. மேற்கொண்டு தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் உடம்பின் மேலும் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இது குறித்து தேவேந்திர குமாரின் மனைவி மாயாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் இப்படுகொலையை செய்தது தெரிய வந்தது.
மாயா தனது காதலன் அனில் என்பவனுடன் சேர்ந்து இக்கொலையை செய்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சதீஷ் மற்றும் மிதிலேஷ் ஆகியோருடன் சேர்ந்து இப்படுகொலையை செய்துள்ளனர்.
கொலை செய்து உடலை 6 துண்டாக வெட்டி அதனை ஒவ்வொரு இடத்திலும் எடுத்துச் சென்று போட்டுள்ளனர். அதில் தலையை ஆற்றில் தூக்கிப்போட்டு இருப்பது தெரியதுள்ளது. நீச்சல் வீரர்கள் துணையோடு போலீஸார் தலையை தேடி வருகின்றனர்.

போலீஸார் மாயா உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அனிலையும் அவனது கூட்டாளியையும் பிடிக்கச் சென்ற போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அனில் காலில் காயம் ஏற்பட்டது.
சமீபத்தில்தான் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தன் கணவனை கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் அடித்து வைத்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு அடுத்து தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.