செய்திகள் :

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்த திருச்சி முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி (42) மற்றும் அப்பள்ளியின் தாளாளர் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காந்திநகர் சத்திரப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (41) ஆகியோர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 - ம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனைத் தொடர்ந்து, மேல் விசாரணைக்காக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நிலவொளி, யுவராஜ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு விசாரணை முடிந்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், தமிழ் ஆசிரியர் நிலவொளிக்கு போக்சோ குற்றத்திற்காக 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், பள்ளி தாளாளர் யுவராஜூக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000 நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டு கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) நீதிபதி தங்கவேல் மேற்படி தீர்ப்பை வழங்கினார். மேற்கண்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

yuvaraj

இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி (தற்போது திருச்சி மாவட்டம்) மற்றும் கலைவாணி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காவலர் சண்முகபிரியா ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொட... மேலும் பார்க்க

பிறந்தநாள் விழா அசைவ விருந்து: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்; ஒருவர் இறப்பு - புதுக்கோட்டையில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற மனைவி திடீர் கர்ப்பம்; ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் - ஒரே இரவில் 3 பேர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகிலுள்ள புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ... மேலும் பார்க்க