Ajith: "நான் சரியான பாதையில் இருக்கிறேன் என பத்ம பூஷன் நம்பிக்கை கொடுத்திருக்கிற...
10th Result: இணை பிரியாத இரட்டை சகோதரிகள்; இருவருக்கும் 474 மதிப்பெண்கள்.. அசத்தல் ஒற்றுமை..!
கோவையில், திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சுந்தரராஜன் – செல்வி தம்பதியினர் உள்ளனர். இவர்களின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தனர்.


இந்நிலையில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், இரட்டை சகோதரிகள் இரண்டு பேரும் 474 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.
முக்கியமாக கணிதம் பாடத்தில் இரண்டு பேரும் சொல்லி வைத்ததை போல 94 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதுகுறித்து இரட்டை சகோதரிகள் கனிஹா மற்றும் கவிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“நாங்கள் இருவரும் ஓரளவுக்கு நன்றாக படித்தோம். ஆனாலும் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.
மேலும், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுப்போம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கடவுளின் கிருபையால் இது நிகழ்ந்துள்ளது. ஆசிரியர்கள் நன்கு உதவினார்கள். 11, 12-ம் வகுப்பில் நாங்கள் இருவரும் பயோ மேக்ஸ் பிரிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

10-ம் வகுப்பை போல 12-ம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண் வாங்குவோம். அனைவருக்கும் நன்றி.” என்றனர்.