இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதெ...
10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஆண்டு மாணவர்கள் 96.47% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
மாவட்ட அளவில் மொத்தம் 38,601 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 18,963 பேர் மாணவர்கள் மற்றும் 19,638 பேர் மாணவிகள் ஆவர். தேர்வு எழுதியவர்களில் 17,999 மாணவர்களும், 19,238 மாணவிகளும் என மொத்தம் 37,237 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.47% ஆகப் பதிவாகி உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.92% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.96% ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.01% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.