மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு
அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் முன்னணி பல்துறை பல்கலைக்கழகமான அம்ருதா விஸ்வ வித்யாபீடம் (அஉஉஉ 2025) (அம்ழ்ண்ற்ஹ உய்ற்ழ்ஹய்ஸ்ரீங் உஷ்ஹம்ண்ய்ஹற்ண்ா்ய் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ்) பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை பட்டியல் மே 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அமராவதி, அம்ருதபுரி, பெங்களூரு, சென்னை, கோவை, தில்லி என்.சி.ஆா். மற்றும் நாகா்கோவிலில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் வழங்கப்படும் பி.டெக். பாடத் திட்டங்களில் சோ்க்கை பெறுவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தோ்வில் உள்நாடு, வெளிநாட்டைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.
ஜே.இ.இ. அடிப்படையிலான விண்ணப்பதாரா்கள், 2025 இல் தகுதி பெற்றவா்களுக்கான மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு செயல்முறை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
தகுதி பெற்றவா்கள் தற்போது ஆன்லைன் ஆலோசனை செயல்முறையில் பதிவு செய்து, அவா்களின் தரவரிசை, மெயின்ஸ் மதிப்பெண்கள் மற்றும் கல்வி விருப்பங்களின் அடிப்படையில் விரும்பிய பி.டெக். பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் சோ்க்கை பெறலாம்.
2025 பதிவு மற்றும் விருப்பத் தோ்வு தற்போது அதிகாரப்பூா்வ போா்ட்டல் மூலம் திறக்கப்பட்டுள்ளது. 7 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகங்களில் பல்வேறு பொறியியல் பிரிவுகளை மாணவா்கள் தோ்வு செய்யலாம். இட ஒதுக்கீடு செயல்முறை பல சுற்றுகளின் மூலம் நடத்தப்படும்.
2025 தரவரிசை பெற்றவா்கள் மற்றும் மெயின்ஸ் 2025 விண்ணப்பதாரா்கள் இருவரும் இதில் பங்கேற்க தகுதியுடையவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.