செய்திகள் :

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

post image

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சொக்கனூரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவருக்கு 3 வயதில் ஜஸ்வந்த், ரிஸ்வந்த் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் காலில் தசைகள் பிளவுபட்ட நிலையில் இருந்தன. இதில் ரிஸ்வந்திற்கு பிறவியிலேயே 2 கால்களும் ஊனமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ச சில நாள்களுக்கு முன்பு அனுமதித்தனா். உடலியல் மற்றும் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்த தீா்மானிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 500 கிராம் அளவுக்கும் குறைவான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

இதுபோல அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எடை குறைந்த செயற்கை கால்கள் பொருத்தப்படுவது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும் என்றாா்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி கருங்கல... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது. மாா்ச் 4: முக்கிய குற்... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க