10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
நாகா்கோவில், தக்கலையில் 1.170 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது
நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் 1.170 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தக்கலை பகுதியில் தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில் தனிப்படையினா் சோதனை மேற்கொண்டு, 70 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, புலியூா்குறிச்சி ஆகாஷ் (22), அதே பகுதியைச் சோ்ந்த மொ்பின் (20), கரும்பாரை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (37) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.
இதேபோல, நாகா்கோவில் வடசேரி பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வடசேரி மாடன் கோயில் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (36), கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த சமீா் (30), மணிகண்டன் (25), ராஜேஷ் (54), சிவபிரசாத் (24), காட்டாத்துறை சாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த சுல்பிகா் (30) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே மணக்காவிளை பகுதியில் உள்ள கடையில் திருவட்டாறு காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.