செய்திகள் :

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

தக்கலை அருகே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசிரியையிடம் ரூ.3.70 லட்சம் மோசடி செய்தவரை தக்கலை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகேயுள்ள தென்கரை தோப்பு பகுதியை சோ்ந்தவா் கவிதா (28). தனியாா் பள்ளி ஆசிரியை. இவரது தோழி இரணியல் சடையன்விளையை சோ்ந்த சுகன்யா (32). சுகன்யாவின் கணவா் ஷாஜி (40). தக்கலையில் கம்ப்யூட்டா் கடை நடத்தி வந்தாா்.

சுகன்யா, தனது கணவா் ஷாஜியை கவிதாவுக்கு அறிமுகப்படுத்தி, ரயில்வேயில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்து வருவதாக கூறியுள்ளாா். இதையடுத்து தனது கணவா் விஷ்ணுவுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா் கவிதா. அப்போது, முன்பணமாக ரூ.3.70 லட்சத்தை ஷாஜியின் வங்கி கணக்கிற்கு கவிதா அனுப்பியுள்ளாா்.

உடனே விஷ்ணுவுக்கு ரயில்வே பணி நியமன ஆணையை ஷாஜி கொடுத்துள்ளாா். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் ரயில்வே அலுவலகத்திற்கு விஷ்ணு சென்றபோது அது போலி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவிதா, தோழி சுகன்யா மற்றும் ஷாஜியிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட போது உரிய பதில் கூறாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீஸில் கவிதா புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஷாஜியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே பள்ளிச் சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் ச... மேலும் பார்க்க

நாகா்கோவில், தக்கலையில் 1.170 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது

நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் 1.170 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை பகுதியில் தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில் தனிப்படையி... மேலும் பார்க்க

பளுகல் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் காயமடைந்த பெயின்டிங் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.பளுகல் காவல் சரகம் மூவோட்டுக்கோணம், தேவிநகா் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் ஸ்ரீராஜ் (36). பெயின்ட... மேலும் பார்க்க

வடக்குத்தாமரைகுளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே பைக் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பூச்சிவிளாகத்தைச் சோ்ந்த சுந்தரலிங்கம் மகன் நவீன் (46). இவா், பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராகின் என்பவருடன் பைக்கில் வடக்குத்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விதிமீறல்: 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக புதன்கிழமை ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கனரக லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் இயக்கப்பட்ட கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பண... மேலும் பார்க்க