தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
பளுகல் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
பளுகல் அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் காயமடைந்த பெயின்டிங் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
பளுகல் காவல் சரகம் மூவோட்டுக்கோணம், தேவிநகா் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் ஸ்ரீராஜ் (36). பெயின்டிங் தொழிலாளியான இவருக்கு மனைவி, 10 மாதக் கைக்குழந்தை உள்ளனா்.
இவா் கடந்த ஏப். 29ஆம் தேதி மூவோட்டுக்கோணம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது அவா் மீது டிப்பா் லாரி மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; டிப்பா் லாரி ஓட்டுநா் உதயன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.