செய்திகள் :

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

post image

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர்.

இதனிடையே தெலங்கானா சுற்றுலாத் துறை சார்பில் போட்டியாளர்கள் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்திலுள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்றிருந்த அழகிப் போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவி விடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது காலனித்துவ மனப்பான்மையிலான செயல் என பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பரிந்துரைக் குழுவுடன், இந்திய உயர் அதிகாரிகள் இன்று மிகக் குறிப்பிடத்தக்க சந்திப்பை ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானில் செய... மேலும் பார்க்க

கர்னல் குரேஷி பற்றி அமைச்சர் சர்ச்சை கருத்து: வழக்கு மே 19-க்கு ஒத்திவைப்பு!

கர்னல் சோஃபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 19-க்கு ஒத்திவைத்துள்ளது. பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி,... மேலும் பார்க்க

'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்ற நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விமானப்படை வீரர்கள் ம... மேலும் பார்க்க

நட்டா அறிவுறுத்தல்: டிரம்ப் பற்றிய எக்ஸ் பதிவை நீக்கிய கங்கனா ரணாவத்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுறுத்தலின்படி நீக்கியிருக்கிறார்.ஆப்பிள் நிறுவனமானது, அதன் உற்... மேலும் பார்க்க

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க