செய்திகள் :

திருப்பூர்: குடிநீர்த் தொட்டியில் மலம்? விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்; இருவர் கைதின் பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதேபோன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின் 6-ஆவது வார்டுக்குட்பட்ட கவுண்டநாயக்கன்பாளையம் உள்ளது. இந்தப் பகுதியில் மாநகராட்சியின் பராமரிப்பில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் குடிநீர்த் தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இந்த குடிநீர்த் தொட்டிக்கு அருகே மயானம் உள்ளது. அங்குச் சிலர் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆய்வு
ஆய்வு

இந்நிலையில், புதன்கிழமை இரவு, சிலர் குடிநீர்த் தொட்டியின் சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து குடிநீர்த் தொட்டியின் மேல் ஏறி மது அருந்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டியிலிருந்து குடிநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் கூறுகையில், "குடிநீர்த் தொட்டியின் மேல் பகுதிக்குச் சிலர் சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர், அங்கு இடிதாங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலுமினியக் கம்பிகளைத் திருட முயன்றுள்ளனர்.

குடிநீர்த் தொட்டி பராமரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டோம். அதில், நெருப்பெரிச்சலைச் சேர்ந்த நிஷாந்த், திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றபடி, குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை" என்றனர்.

குடிநீர்த் தொட்டி

இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் பேசினோம்.

"குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கவில்லை. விஷமிகள் சிலர் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ளதாக வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

அவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அந்த குடிநீர்த் தொட்டியை ஊர்த் தலைவரின் முன்பு ஆய்வு செய்தோம். அதில், மலம் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது, குடிநீர்த் தொட்டி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதி மக்களுக்கு முன்பு குடித்தும் காண்பித்தோம். இது முழுக்க முழுக்க வதந்தி" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'முதியோர் இருக்கையில் அமரக் கூடாது' - முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்!

சென்னை வண்டலூர் அரசு பேருந்து ஒன்றில் முதியவர் ஒருவர் பயணத்திற்காக ஏறியிருக்கிறார். அப்போது அவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்க சொல்லும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் ஐயங்கொல்லை மக்கள்; கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் பஞ்சாயத்தில் 29 கிராமங்களில் ஒன்றான ஐயங்கொல்லையில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காப்புக்காட்டில் அமைந்த இந்த கிராமத்திற்கு ... மேலும் பார்க்க

காட்பாடி சாலையில் செயல்படாத சிக்னல்கள்; மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்களா அதிகாரிகள்?!

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக காட்பாடி செல்லும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வேலூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் செல்வதற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும்... மேலும் பார்க்க

ஊட்டி: ``உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க'' - மலர் அரியணையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 - வது மலர் கண்காட்சி இன்று காலை (15- 05 - 2025 ) தொடங்கி மே மாதம் 25 - ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஊட்டியில் முதல்வர் ... மேலும் பார்க்க

`ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: `நீதிக்காக துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.பின்னர், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, ... மேலும் பார்க்க