செய்திகள் :

'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

post image

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்ற நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு விமானப்படை வீரர்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது,

"1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது.

நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடுகிறேன். இன்று இங்கு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இரு படைகளும் இந்திய எல்லையை பாதுகாத்துள்ளீர்கள். உங்களின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்.

ஆபரேஷன் சிந்தூரின்போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது.

சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த ஒரு பெரும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. அந்த நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளது.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனி பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும்போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக்... மேலும் பார்க்க

துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்! -ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக எதிர்வினை

புது தில்லி: ’இந்தியா’ கூட்டணிக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்றும், தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கிய நிறுவனங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தல... மேலும் பார்க்க

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் பாஜக! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்திய ராணுவத்தினரை பாஜகவினர் தொடர்ந்து அவமதித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில்... மேலும் பார்க்க