திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பரிந்துரைக் குழுவுடன், இந்திய உயர் அதிகாரிகள் இன்று மிகக் குறிப்பிடத்தக்க சந்திப்பை ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் எதிர்ப்பு முன்னணி (TRF) என்ற டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட வேண்டும் என்று வலியுறுத்தியதோடூ, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் ஒரு கிளையாக அதன் நிறுவப்பட்டுள்ளதையும், அதன் பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடர்பையும் விரிவாக விவரித்துள்ளனர்.
மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் டிஆர்எஃப் அமைப்புக்கு இருக்கும் தொடர்புகளை உறுதி செய்யும் ஆவணங்களையும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் கையெழுத்துகள், நிதிப் பரிமாற்றம், உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு உள்ளிட்ட அனைத்துக்குமான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விளக்கக் கூட்டத்தில், பாகிஸ்தானிலிருந்து இந்த பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றிய தெளிவான புரிதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரைக் குழுவிற்கு வழங்குவதை இந்தியா முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு டிஆர்எஃப் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.