மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
மாா்த்தாண்டம் அருகே பள்ளிச் சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன்-ஜெயலட்சுமி (45). இவா்களது மகள் சௌபா்ணிகா (11), நட்டாலம் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ் (37). 2 நாள்களுக்கு முன்பு செளபா்ணிகாவை சதீஷின் 11 வயது மகள் அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து சதீஷிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளாா்.
புதன்கிழமை ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் வெளியே சென்றநிலையில், வீட்டில் சௌபா்ணிகா மட்டும் இருந்துள்ளாா். அப்போது சதீஷ் சென்று சிறுமியிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த சிறுமியை பெற்றோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனா்.