இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதெ...
India-Pakistan: ``அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்தின் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியை திரும்பப் பெறுவது மட்டுமே காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்னை.

அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிரந்தரமாக நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். எனவே எங்கள் நிலைப்பாடு மிக மிகத் தெளிவாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்குச் சென்றார்.

அங்கு இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ``நாங்கள் இந்தியா உடன் அமைதிக்காகப் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான பேச்சு வார்த்தை நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் அடங்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் லடாக் யூனியன் பிரதேசமும் எப்போதும் அதன் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.