தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு...
``ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்...'' - அண்ணாமலை
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஆடு, மாடோடு இருக்கிறேன். விவசாயம் பார்கிறேன்.

நேரம் கிடைத்தால் கோயிலுக்கு போகிறேன். தேவையில்லாத வேறு வேலையைப் பார்க்காமல் என்னுடையப் பணியை சந்தோஷமாக செய்கிறேன்.
புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.
இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். மத்திய இணை அமைச்சர் பதவி வரும் போது பெற்றுக் கொள்வேன். தற்போது, கூண்டுக் கிளியாக இருக்க விரும்ப வில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பாஜக, ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்கிறதா? என்ற கேள்விக்கு, “ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் போது ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசுவார்” என்று பதிலளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs