வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தி...
பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்து முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு காளைகளை தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
காளைகள் முட்டி காயமடைவோருக்கு அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆலங்குடி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு: ராமதாஸ்