செய்திகள் :

`துருக்கி சந்திப்பு' புறக்கணித்த புதின்; `குறைந்தபட்சம் ஏதாவது பேசுவாரா?' - தவிக்கும் ஜெலன்ஸ்கி

post image

'ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?' - உலகம் முழுக்க உள்ள கேள்விகளில் இதுவும் ஒன்று.

அதற்கு அச்சாணியாக, ரஷ்யா அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் துருக்கியில் நேருக்கு நேர் சந்திந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருக்கிக்கு புதின் செல்லாததால் உலக நாடுகளுக்கு பெரும் ஏமாற்றம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதின், 'துருக்கியில் உக்ரைனும், ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும்' என்று கூறியிருந்தார். புதின் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தால் மட்டுமே, ஜெலன்ஸ்கி அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியது.

ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தினால், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதன்படி, நேற்று துருக்கிக்கு பயணமானார் ஜெலன்ஸ்கி. ஆனால், ரஷ்யாவில் இருந்து புதின் சார்பாக ஒரு குழு துருக்கிக்கு சென்றதே தவிர, புதின் செல்லவில்லை.

புதின் துருக்கிக்கு செல்லாததால், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தையும் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்விதமாக, தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, இன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடக்க உள்ள ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்துகொள்வார்களே தவிர, இரு நாட்டு அதிபர்களும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டார்கள்.

ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கப் பதிவில், "இந்தப் பேச்சுவார்த்தையில், 'போர் நிறுத்தம்' தான் எங்களுக்கு முதன்மையானது. ரஷ்யா இந்த சந்திப்புகளை தீவிரமாக எடுத்துகொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என்பதும் தெரிகிறது. ஆனால், அவர்கள் சந்திப்பின் போது குறைந்தபட்சம் எதையாவது பேச விரும்புகிறாரா? என்பதைப் பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

``ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்...'' - அண்ணாமலை

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழ... மேலும் பார்க்க

India-Pakistan: ``அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

அமமுக துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தஞ்சாவூர், தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வினோ பாரத், மனோ பாரத் என இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பணிகளை ஒப்பந... மேலும் பார்க்க

``என்னுடைய நிழலைக் கூட பார்க்க முடியவில்லை'' - அமெரிக்க சிறை அனுபவம் குறித்து பகிரும் இந்தியர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம், ஹமாஸ் ஆதரவு போன்றவற்றிக்கு குரல் எழுப்புவர்களுக்கு கடுமையான தண்டனை என அவரது அதிரடிகள் நீண்டு கொண்டு போகி... மேலும் பார்க்க

மோடியை புகழ்ந்த கங்கனா: பதிவை நீக்கச் சொன்ன ஜேபி நாட்டா; `வருந்துகிறேன்' - கங்கனா ரனாவத் பதிவு!

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மெதுவாக குறைத்து வருகிறது. அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்... மேலும் பார்க்க