செய்திகள் :

நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கு; ஜாமீனில் சென்றவர்கள் தலைமறைவு - வழக்கு விசாரணை தொய்வு?

post image

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜ். பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி, தனது தோழியுடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இக்கொலைச் சம்பவம், நெல்லை மாநகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தீபக்ராஜனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் மே 20-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெல்லை மாநகர போலீஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தீபக் ராஜ்

ஜாமீன்... பிடிவாரண்ட்!

ஏற்கெனவே இக்கொலை வழக்கினை துரிதமாக நடத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நீதிமன்ற விசாரணை கைது செய்யப்பட்டவர்களிடம் வீடியோ காலில் நடந்து வருகிறது. இதற்கிடையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் வெளியே சென்று நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு  அக்டோபர் 3-ம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத சரவணன், தம்பான், ரமேஷ், நம்பிராஜன் ஆகிய நான்கு பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக போலீஸார், அவர்களை பிடிப்பதும் மீண்டும் ஜாமீனில் சென்ற சிலர் தலைமறைவாவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி தீபக்ராஜின் கொலை வழக்கு, நெல்லை மாவட்ட தீண்டாமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட நவீன், பவித்ரன், காசிராமன், முத்துஇசக்கி, ஐய்யப்பன், நம்பிராஜன், சங்கர் ஆகிய 7 பேர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வீடியோ காலில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில், சரவணன், மற்றொரு ஐயப்பன், தம்பான், முத்து சரவணன், சுரேஷ், ரமேஷ், லெட்சுமண காந்தன், வாணுமாமலை, முத்து ஆகிய 9 பேர் ஆஜராகவில்லை.

நெல்லை- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இதில், தகுந்த பாதுகாப்புக் காரணத்தைக்கூறி அவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் அவர்களுக்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அனுமதி வழங்கியது. மேலும் இந்த வழக்கு, குற்றம்சாட்டப்பட்ட இசக்கிதுரை கடந்த 2 மாதங்களாகவும், முருகன் என்பவர் 3 மாதங்களுக்கு மேலாகவும்,  விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். போலீஸார் அவர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 மாதங்களாக சரிவர விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகின்றனர். இதனால், தீபக்ராஜின் கொலை வழக்கு விசாரணை தொய்வு அடைந்துள்ளது என்கிறார்கள்.

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க

காரில் வைக்கும்படி முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடி; கோயில் உண்டியலில் போட்ட டிரைவர் - ஷாக்கான ஆடிட்டர்

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தவர் ராஜேஷ். இதனால் ராஜேஷ் மீது ஆடிட்டருக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்... மேலும் பார்க்க

பிறந்தநாள் விழா அசைவ விருந்து: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்; ஒருவர் இறப்பு - புதுக்கோட்டையில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

பிரிந்து சென்ற மனைவி திடீர் கர்ப்பம்; ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் - ஒரே இரவில் 3 பேர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகிலுள்ள புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ... மேலும் பார்க்க