செய்திகள் :

பிறந்தநாள் விழா அசைவ விருந்து: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்; ஒருவர் இறப்பு - புதுக்கோட்டையில் சோகம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் அருகில் உள்ள வேளாணி கிராமத்தில் வசிப்பவர் சத்யராஜ். இவரது மூன்றாவது மகன் தேவரக்சன் என்பவரின் முதல் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது, அவர் வைத்த மதிய உணவு விருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துள்ளனர். அந்த மதிய விருந்தில் சிக்கன், மட்டன் மற்றும் முட்டை ஆகிய அசைவ உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. அந்த விருந்தில் மதிய உணவு சாப்பிட்டதிலிருந்து மாலை முதல் சில நபர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 30 நபர்கள் ஏம்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். மேலும், சிலர் சிவகங்கை மாவட்டம், சூரக்குடி அரசு மருத்துவமனைக்கு‌ சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பிறந்தநாள் விருந்துக்காக 14 கிலோ வரை வெள்ளாட்டுக்கறியை செப்பாவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி குமார் என்பவரிடமும், 11 கிலோ கோழிக்கறியை சிறுகத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த சோனமுத்து என்பவரது பிராய்லர் கடையிலிருந்தும் வாங்கியதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

pdukoottai

இந்நிலையில், நேற்று இரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கருப்பையா (வயது:60) என்பவர் இறந்துபோயுள்ளார். தற்போது ஏம்பல் அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள் இருவர், ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர், ஏம்பல் உதவி ஆய்வாளர், ஏம்பல் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேற்படி விழா நடத்திய சத்யராஜ், தனது திருமணத்திற்கும் செப்பா வயல் குமாரிடம் தான் கறி வாங்கியதாகவும், அப்போதும் ஐந்து நபர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், கறிகளை வழங்கிய அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். பிறந்தநாள் அசைவ விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதோடு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், ஏம்பல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிந்து சென்ற மனைவி திடீர் கர்ப்பம்; ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் - ஒரே இரவில் 3 பேர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அருகிலுள்ள புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ... மேலும் பார்க்க

`ரூ.3 கோடி கேட்ட மனைவி ரகசிய திருமணம்' - விவாகரத்து பெற உளவாளியாக மாறி கோர்ட்டில் நிரூபித்த கணவன்

கணவன் மனைவி இடையே சந்தேகம் என்ற ஒன்று வந்துவிட்டால் வாழ்க்கை நகரமாகத்தான் அமையும். இதனால் சில திருமணங்களில் மணமாகி ஒரு சில மாதங்களில் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவன... மேலும் பார்க்க

திருச்சி: கடன் பிரச்னை? 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து தம்பதி; என்ன நடந்தது?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா (வயது: 35) என்ற மனைவியும் ஆராதனா (வயது: 9), ஆலியா (... மேலும் பார்க்க

ராஜபாளையம்: தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை - காப்பக இளைஞரிடம் போலீஸ் விசாரணை!

ராஜபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை அதே காப்பகத்தை சேர்ந்த இளைஞர் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம்... மேலும் பார்க்க

தாய், தந்தை உட்பட உறவினர்கள் 4 பேரைக் கோடரியால் கொன்ற வழக்கு; கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி... மேலும் பார்க்க

நாகை சிறுமி மர்மச் சாவு? ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் போராட்டம்; ஜன்னலில் எட்டிப் பார்த்த கலெக்டர்

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் இளைஞர் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இருவரும் ரயில் மூலம் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். இதில் வேளாங... மேலும் பார்க்க