பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சுவென் லைஃப், வருவாய் வெகுவாக சரிந்து, இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.2.4 கோடியாகயாக இருந்த வருவாய் அதன் 4-வது காலாண்டில் ரூ.1.5 கோடியாகக் குறைந்துள்ளது.
வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றிற்கு முந்தைய காலாண்டு வருவாய் ரூ.43.8 கோடியாக சரிந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு 4-வது காலாண்டில் இது ரூ.30.3 கோடியாக இருந்தது.
இந்த காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.46.6 கோடியாக உயர்ந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.34.2 கோடியாக இருந்தது. இந்த அதிகரிப்பின் ஒரு முக்கிய பகுதியானது ஊழியர் நலன்களுக்கான செலவினங்களை அதிகரித்ததன் மூலம் வந்தது. இது கடந்த ஆண்டு ரூ.3.46 கோடியிலிருந்து ரூ.6.06 கோடியாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் சுவென் லைஃப் சயின்சஸின் பங்குகள் ரூ.186.45க்கு வர்த்தகமான நிலையில் மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்குகள் ரூ.185.40க்கு வர்த்தகமானது.
இதையும் படிக்க: ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் நிகர இழப்பு ரூ.127 கோடி!