பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் நிகர இழப்பு ரூ.127 கோடி!
புதுதில்லி: ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், 2025் மார்ச் காலாண்டில் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் ரூ.126.99 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தநிறுவனம் ரூ.143.67 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.823.34 கோடியாக இருந்த மொத்த வருமானம் ரூ.407.78 கோடியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2024-25ல் நிறுவனம் ரூ.148.74 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்த நிலையில், அதற்கு முந்தைய ஆண்டு ரூ.128.25 கோடி நிகர லாபமாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,148.71 கோடியிலிருந்து ரூ.1,257.33 கோடியாக உயர்ந்துள்ளது.
முன்பு செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்ட ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், அதன் கூழ் மற்றும் காகித வணிகத்தை சமீபத்தில் விற்றுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்குகள் 0.97 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,045.85 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.85.50-ஆக முடிவு!