டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதில...
அக்ஸோ நோபல் 4-வது காலாண்டு லாபம் சரிவு!
புதுதில்லி: வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.108.7 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்ததாக தெரிவித்தது.
மார்ச் காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து வந்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.1,022.1 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இது ரூ.973.4 கோடியாக இருந்தது என்றது டியூலக்ஸ் பெயிண்ட்ஸ்.
இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.887.3 கோடியாக உயர்ந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் அது ரூ.836.7 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2025 முடிவடைந்த நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.429.5 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு ரூ.426.6 கோடியாக இருந்தது.
நிதியாண்டு 2025ல் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.4,091.2 கோடியாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் இது ரூ.3,961.6 கோடியாக இருந்தது.
2024-25ஆம் ஆண்டிற்கான ஒரு பங்கிற்கு ரூ.30 என்ற ஈவுத்தொகையை, வாரியம் பரிந்துரைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிவு!