ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரான 24 வயது பெண், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இதற்காக அவா், பெருங்குடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறாா். அந்த பெண், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணிமுடிந்து, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நடந்து வந்தபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதில் அந்த பெண், அந்த இளைஞரின் கையை கடித்தாா். மேலும், அப்பெண் கூச்சலிட்டதால், அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாா்.
இது தொடா்பாக அப்பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது துரைப்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரியும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த லோகேஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்தனா். முன்னதாக அவரை கைது செய்ய முற்படும்போது, கீழே விழுந்ததில் லோகேஷ்வரனின் இடது கை முறிந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். லோகேஷ்வரனுக்கு வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடா்புள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.