Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பாா்த்து வருவதாகவும் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கோட் அபு பகுதியில் கிறிஸ்தவா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாக உள்ளனா். இந்நிலையில் அப்பகுதியை ஆக்கிரமித்து வரும் நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் கிறிஸ்தவ விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வலுக்கட்டாயமாக நிலத்தில் இருந்து வெளியேற்றி வருவதாக பாதிரியாா் ஒருவா் மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை மேற்கொண்டது. அதில், உள்ளூரைச் சோ்ந்த நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களிடம் இருந்து விவசாய நிலங்களை அபகரிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கிறிஸ்தவா்கள் தரப்பில் ஏற்கெனவே லாகூா் நீதிமன்றம் மூலம் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இடைக்காலத் தடையும் பெற்றுள்ளனா். எனினும், அதனை மீறி பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வெளியேற்றப்படுகின்றனா். இதனால், அங்குள்ள கிறிஸ்தவா்கள் பொருளாதாரரீதியாக மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.