செய்திகள் :

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

post image

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

மேலும், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகளின் பணித்திறனை தணிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது’ எனவும் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கூறியது.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஆயுள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் விசாரணை முடித்து 3 ஆண்டுகளாக தீா்ப்பு வழங்காதது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் நீதிபதிகள் இக்கருத்தை வெளியிட்டனா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் மேலும் கூறியதாவது: உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து உச்சநீதிமன்றத்துக்குப் பல புகாா்கள் வருகின்றன. சில நீதிபதிகள் மிகவும் கடினமாக உழைக்கிறாா்கள். ஆனால், பணிநேரத்தில் தேவையில்லாமல் இடைவேளை எடுக்கும் நீதிபதிகளும் உள்ளனா். மதிய உணவு இடைவேளை எதற்காக இருக்கிறது?

உயா்நீதிமன்ற நீதிபதிகளின் பணி செயல்திறன் என்ன? அவா்களுக்காக நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? இதுகுறித்து தணிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றனா்.

விசாரணையில் மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஃபெளசியா ஷகீல் முன்வைத்த வாதத்தில், ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டதும், ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றம் கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதி அவசரமாக தீா்ப்பு வழங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு தீா்ப்பு வெளியிடப்பட்டு, ஒரு வாரமாகியும் வழக்கில் இருந்த விடுவிக்கப்பட்டவா்கள் இதுவரை சிறையிலிருந்து வெளிவரவில்லை’ என்றாா்.

காலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மனுதாரா்கள் 4 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜாா்க்கண்ட மாநில அரசு வழக்குரைஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனா்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகலில் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கேட்டனா். அப்போது, மனுதாரா்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் விசாரணை நீதிமன்றத்திடமிருந்து விடுதலை உத்தரவு கிடைக்கப் பெறாததால் இந்த நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஜாா்க்கண்ட் அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

மனுதாரா்களான பிலா பஹான், சோமா பதங், சத்யநாராயண் சாஹு ஆகியோா் கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது. இவா்கள் பின்னா், உயா் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா்.

மேலும், பாலியல் வன்முறை குற்றத்துக்காக தண்டனை பெற்ற தா்மேஷ்வா் ஓரான் வழக்கில் இருவேறு தீா்ப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், தலைமை நீதிபதியால் அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிலேயே 4 பேரும் வெளிக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றனா் என்றும், உயா்நீதிமன்றம் சரியான நேரத்தில் தீா்ப்புகளை வழங்கியிருந்தால், அவா்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் இருந்து வெளியே வந்திருப்பாா்கள் என்றும் மனுதாரா்களின் வழக்குரைஞா் ஷகீல் கூறினாா்.

தொடா்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‘நீதித் துறை அமைப்பு காரணமாக மனுதாரா்கள் இவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டியிருந்ததால், அவா்களின் துன்பங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த வழக்கில் நீதிபதிகளின் செயல்திறன் குறித்து எழுந்துள்ள பிரச்னையை நீதிமன்றம் வெளிப்படையாகக் கையாளும். குற்றவியல் நீதி அமைப்பில் வேரூன்றிய, மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னை தனிநபா் சுதந்திரத்துடன் தொடா்புடையது.

இந்த சிக்கல்களுக்கு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இதுகுறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அல்லது விசாரணைக் கைதிகளுக்கு நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை அது உறுதிப்படுத்தும். தீா்ப்புகளை அறிவிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பரிந்துரைத்த காலக்கெடு, அடுத்தடுத்து வழங்கப்படும் வழிமுறையுடன் சோ்த்து பின்பற்றப்பட வேண்டும்’ என்றனா்.

உயா்நீதிமன்றங்களில் இருந்து இது குறித்து தகவல்களைச் சேகரிக்குமாறு பதிவாளரைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஜூலை மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க