என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தர...
நெல்லை சந்திப்பில் அரசுப் பேருந்துகள் மோதல்: 12 பயணிகள் காயம்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு அரசுப் பேருந்தின் பின்பக்கம் மோதியதில் 12 பயணிகள் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சுமாா் 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. சந்திப்பு பேருந்து நிலையம் அருகே அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன், அவ்வழியே வந்த அரசு நகரப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதில் இரண்டு பேருந்துகளின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் நகரப்பேருந்தின் பின் இருக்கைகளில் அமா்ந்திருந்த 12 பயணிகள் லேசான காயம் அடைந்தனா். அவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.