`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன த...
குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் உவரி காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், காவல் ஆய்வாளா் சிவகளை அளித்த அறிக்கையை ஏற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, கௌதமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.