அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
முக்கூடலில் வயிற்றுப்போக்கால் 20 போ் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் வயிற்றுப்போக்கால் 20-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
முக்கூடல் பேரூராட்சிப் பகுதி, சிங்கம்பாறை, அண்ணாநகா், சிவகாமிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக சிகிச்சை பெற்றனராம். மேலும் சிலா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை கொதிக்க வைத்து அறிய பின்னா் பருகுமாறு சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.