தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
டாடாவின் அல்ட்ரோஸ் இப்போது புது வடிவில்!
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, அதன் அல்ட்ரோஸ் மாடலை தற்போது புதுப்பித்துள்ளது.
முதன்முதலாக 2020ல் அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். புதிதாக மேம்படுத்தப்பட்ட டாடா அல்ட்ரோஸ் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
2025ல் புதுப்பிக்கப்பட்ட டாடா அல்ட்ரோஸ் மாடல் இந்தியாவில் மே 22ல் அறிமுகமாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக டாடா அல்ட்ரோஸ் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நேர்த்தியான, மெல்லிய கோடுகள் மற்றும் 3D முன்பக்க கிரில் பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன் புதிய லுமினேட் எல்இடி விளக்குகள், இன்ஃபினிட்டி கனெக்டெட் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டல்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபாக் லேம்ப் ஹவுசிங் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர், புதிய 5 ஸ்போக், 16 இன்ச் அலாய் வீல்களும் அடங்கும்.
அதேபோன்று அல்ட்ரோஸின் முன்பக்கம், உள்புறம் மற்றும் கேபினிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். டேஷ்போர்டின் வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
இந்த புதிய மாடலானாது ஸ்மார்ட், ப்பூர், கிரியேடிவ், அக்கம்ப்டிளஷ்டு மற்றும் அக்கம்ப்டிளஷ்டு எஸ் என அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் 17.78 செ.மி தொடுதிரை, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், குரல் உதவியுடன் கூடிய மின்சார சன்ரூஃப் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அல்ட்ரோஸில் இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டுள்ளது.
அல்ட்ரோஸின் விலை ரூ. 7.50 லட்சம் முதல் ரூ. 11.50 லட்சம் வரை இருக்கலாம். காரின் ரேசர் அல்லது டார்க் எடிஷனை பொருத்து விலை அதிகரிக்கலாம்.