மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியானது. அதில் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.