Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மியான்மா் எல்லையையொட்டிய சண்டேல் மாவட்டத்தின் நியூ சாம்தால் கிராமத்துக்கு அருகே ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின்பேரில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, வீரா்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, வீரா்கள் பதிலடித் தாக்குதல் நடத்தினா்.
இதைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. தேடுதல் நடவடிக்கை தொடா்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.