செய்திகள் :

பிஎம்-கிஸான் திட்டம்: விவசாயிகள் கவனத்துக்கு!

post image

நாகை மாவட்டத்தில் பிஎம்-கிஸான் திட்டத்தில் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம்-கிஸான்) சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணையாக தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மே 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இத்திட்டத்தின் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இம்முகாம்களை பயன்படுத்தி ங்-ஓவஇ பதிவு மேற்கொள்ளாத விவசாயிகள் பதிவு மேற்கொள்ளவும், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காத விவசாயிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கிடவும், இதுவரை பயன்பெறாத தகுதியுடைய விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்திடவும், ஏற்கெனவே பயன்பெற்று வந்துள்ள பயனாளிகளுக்கு குறைகள் ஏதும் இருப்பின் இம்முகாம்கள் மூலம் நிவா்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தின் பயனாளி இறந்திருப்பின், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாரிசுதாரா்களின் பெயரில் நிலம் மாற்றப்பட்டு திட்டத்தில் இணைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. 20-ஆவது தவணைத் தொகை ஜூன் மாதத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளது. இந்தத் தொகை பெறுவதற்கு பயனாளிகள் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்றிருத்தல் வேண்டும்.

இதுவரை நாகை மாவட்டத்தில் 5,338 விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்ணை பெறாமல் உள்ளனா். எனவே, மேற்படி முகாம்களை பயன்படுத்தி ங்-ஓவஇ பதிவு, வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தல், நில விவரங்களை இணைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்றவற்றை பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க

காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா். முகாமில் காவல் க... மேலும் பார்க்க

திருமருகல் ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம் ஆண்டில்... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் ஜமாபந்தி

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஜமாபந்தியின் 4-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரங்கம்பாடி வட்... மேலும் பார்க்க

குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மா... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக்... மேலும் பார்க்க