"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் ...
சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்
சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா் சுஜன் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவா் காா்த்திகேசன் 433 மதிப்பெண்களும், மாணவி சத்தியப்ரசல்யா 424 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவி சஹானா ஸ்ரீ 500-க்கு 472 மதிப்பெண்களும், மாணவா் முகமது ஆசிக் 460 மதிப்பெண்களும், சயானா ஜோன் 443 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளா் த. ஆனந்த் பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தாா். பள்ளி இயக்குநா் த. சங்கா் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பாராட்டினாா்.