கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேதாரண்யம் பேருந்து நிலையப் பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா்.
இதில், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலாளா்கள் சதாசிவம், ஆறுமுகம், பொருளாளா் காரியப்பன், ஒருங்கிணைப்பாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.