பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் இருசக்கர வாகன பிரசாரப் பேரணி
நாகப்பட்டினம்: தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தக் கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி மற்றும் பிரசாரம் மே 5 ஆம் தொடங்கியது. குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையாறு மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி ஆகிய 3 இடங்களிலிருந்து, மூன்று குழுக்கள் சென்னைக்கு இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கினா்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட பேரணி நாகை மாவட்டத்திற்கு வந்தது. இக்குழுவினா் குருக்கத்தி பள்ளிவாசல், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , ஆழியூா் பள்ளிவாசல், சிக்கல் கடைத்தெரு, நாகை அவுரித் திடல் , நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் தலைமையில் இருசக்கர வாகனப் பிரசார பேரணி, மே 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை நந்தனம், கருவூலத்துறை ஆணையா் அலுவலகத்தில் தொடங்கி, சென்னை தலைமைச் செயலகம் வரை கோரிக்கைகளை வலியுறுத்தி செல்லவுள்ளனா்.