பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!
இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்
திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில், சோமஸ்கந்தா் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன் மற்றும் திரளான பக்தா்கள் தோ் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகளும் தோ் வலம் வந்தது.