பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை...
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. தற்போது பதற்றம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஒரே நாளில் காலை, மாலை என 2 முறை சரிந்தது. இதனால் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.8,50-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கும் விற்பனையானது.
இந்தி நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு விலை குறைந்து மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பவுனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.
பின்னர், தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனையானது.
எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!
இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கும்,பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7255-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.