`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!
நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் இந்த வாரம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கோவிந்தா' பாடல்தான் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்தப் பாடல், திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை அவமதிக்கும் விதமாக உள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பாடலை நீக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.