செய்திகள் :

Santhosh Narayanan : `உதித் நாராயணன் சார், நீங்களா..!' - இலங்கை இளைஞரின் செயலைப் பகிர்ந்த SaNa

post image

தமிழ் சினிமாவில் சமகால முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் இவரது இசையில் வெளியாகியிருந்த ரெட்ரோ திரைப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது போல, இவரது குரலில் உருவாகும் பாடல்களுக்கென்றும் தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

ரெட்ரோ படத்தில், `கனிமா', `தி ஒன்' ஆகிய பாடல்கள் இவரின் குரலில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், இலங்கையில் ஒரு இளைஞர் சந்தோஷ் நாராயணனைப் பாடகர் உதித் நாராயன் என்று நினைத்துப் பேசிய சம்பவத்தை, சந்தோஷ் நாராயணனே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் சந்தோஷ் நாராயணன், "கொழும்புவின் (Colombo) வீதியில் நேற்று நடந்துகொண்டிருந்தேன். அப்போது, ஒரு இளைஞர் ஓடிவந்து, அவசர அவசரமாக செல்போனை எடுத்து, `உதித் நாராயன் சார், உங்களுடைய பாடல்களெல்லாம் ரொம்ப பிடிக்கும்' என்றார். என்னைப் பாடகராக அங்கீகரித்ததில் இப்போது எனக்கு மகிழ்ச்சி" என்று ஜாலியாகப் பதிவிட்டிருக்கிறார்.

`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.... மேலும் பார்க்க

"அனுராக்கின் மதுப்பழக்கத்தால்..." - காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் சர்ச்சை கருத்துக்கு அனுராக் பதில்

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடைசியாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'தி வேக்சின் வார்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டன. Anurag Kashyapஇதைத் தொடர்ந்து, தற்போது 'தி டெல்ல... மேலும் பார்க்க

Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து விஜயகாந்த் ரசிகர்கள்

சென்னையை அடுத்த மாமண்டூரில் மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் நிறுவிய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைவேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள்... மேலும் பார்க்க

Anurag Kashyap: "என்னுடைய மகள் திருமணத்திற்காக விஜய் சேதுபதி செய்த உதவி!" - அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் தற்போது நடிகராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு இவர் 'மகாராஜா', 'ரைபிள் கிளப்' ஆகிய திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளியிருந்தார். Anurag Kashyapஇந்நிலையில், 'தி இந்து' ந... மேலும் பார்க்க

DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். சின... மேலும் பார்க்க

Tourist Family: "எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.." - இயக்குநர் அபிஷன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் ... மேலும் பார்க்க