"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் ...
DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை
சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். சினிமா விமர்சகராக சந்தானம் நடித்திருக்கும் காமெடி கலாட்டா வகையிலான இப்படத்தின் 'Kissa 47' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இப்பாடலில் கடவுள் பெருமாளின் 'ஶ்ரீனிவாச கோவிந்தா' வரிகள் இடம்பெற்றிருக்கும். ஜாலியான, குத்தாட்டம் போடும் பாடலில் கடவுள் குறித்து வரிகள் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இந்த சர்ச்சைக் குறித்துப் பேசிய நடிகர் சந்தானம், "பெருமாள்' கடவுள், 'கோவிந்தா கோவிந்தா' பாடலையும் படத்தில் கிண்டல் செய்வதாக இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திருப்பதி சென்றிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், "இந்து மதத்தை அவமதிக்கும், கடவுளை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய இந்தப் பாடலை நீக்க வேண்டும்" என ஆந்திரா துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பாடலை பார்த்துவிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
இதுகுறித்து திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகாரும் அளித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs