செய்திகள் :

`பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வேலையாக இருக்கிறது!' - ஊட்டியில் கொதித்த ஸ்டாலின்

post image

முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌. முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு நேற்று மாலை கரும்பு வழங்கிய முதலமைச்சர்,

முதலமைச்சர் ஸ்டாலின்

பழங்குடி பாகன்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார்.இந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " அ.தி.மு.க - வின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவமே சாட்சி என தொடர்ந்து சொல்லி வந்தோம். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த சமயமான கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட யாருமே தப்ப முடியாது எனச் சொல்லியிருந்தோம். எத்தகைய பின்புலம் இருந்தாலும் தி.மு.க ஆட்சியில் தண்டனை நிச்சயம் என திட்டவட்டமாகச் சொல்லியிருந்தோம். இன்றைக்கு அது நடந்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி நிலை நாட்டப்படும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை எதற்காக சந்தித்தார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். மெட்ரோ திட்டம் முதல் நூறுநாள் வேலைத் திட்டம் வரை நிதியை நான்தான் கேட்டேன் என பொய் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பொய், பித்தலாட்டம் செய்வதே வேலையாகக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் " என்றார்.

தென்காசி: பணி அனுபவ சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுர... மேலும் பார்க்க

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

"சிந்து நதி ஒப்பந்தம்; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Modi: `அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்; இந்தியா மீது கைவைத்தால்...' - பஞ்சாப்பில் மோடி உரை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

"வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்" - முதல்வருக்கு இபிஎஸ் பதில்

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முதல்வர் ஸ்டாலின் `டு' விஜய்... தீர்ப்பை வரவேற்கும் அரசியல் தலைவர்கள்!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசைவார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மி... மேலும் பார்க்க