பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை' - திருமாவளவன்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல்.

இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் இருந்தது.
மாமருந்தாக...
அரசுத் தரப்பில் உறுதியாக நின்று வழக்குறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்திருக்கிறது.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, விசிக என்று உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தது. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தன. அதனால் தான் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
அதிலிருந்து அவர்களால் மீள முடியாத ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள். அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையங்களாக இருந்தன. இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல, யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச வலைதள விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.” என்றார்.