2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!
சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி
சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு வீடுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருள்கள், தோட்டத்தில் கால்நடைகளுக்கு வைத்திருந்த தீவனங்கள் மற்றும் விவசாய பயிர்களை உண்டு சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் வளாகத்தில் இருக்கும் கடைகள் மற்றும் உணவு கூடங்களுக்கு வரும் ஒற்றைக் காட்டு யானை உணவுப் பொருள்களை உண்டு சேதப்படுத்தி வந்தது. இதனால் பக்தர்களை பாதுகாக்க வனத்துறையினர் நரசிம்மன் மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானைகளை அங்கு நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் கடைகளை சேதப்படுத்தி வந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு வருவதில்லை, இதனால் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை சின்ன தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை அவசர அவசரமாக கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் கைப்பேசி விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாய நிலங்களுக்கு இரவு நேரங்களில் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.