அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரை மாற்ற தொடர்ந்து சீனா முயற்சித்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் வீணான மற்றும் அபத்தமான முயற்சிகள். இத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதையும், என்றுமே அது எங்களுடையதாகவே இருக்கும் என்பதையும், இந்தியாவில் இருந்து பிரிக்கவே முடியாது பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!
மேலும், எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, சீனாவின் வீணான முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், என்று அவர் கூறினார்.
இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரசேதம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அன்றும், இன்றும், என்றுமே இருக்கும் என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளின் பெயர்களை மாற்றியுள்ள சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனவும், திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜங்னன் எனவும் பெயரிட்டு அழைத்து வருகிறது.
ஏற்கெனவே, 2017 இல் 7 இடங்களின் பெயர்களையும், 2021 இல் 15 இடங்களின் பெயர்களையும் மாற்றியுள்ள சீனா, 2023 இல் 5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் என 11 இடங்களின் பெயர்களை மாற்றி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பெயர் மாற்ற முயற்சியில் சீனா இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.