செய்திகள் :

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

post image

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் அலெக்ஸ்(45).இவர் ஜவுளித் தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா (35) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆராதனா (9), ஆலியா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.

இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையிலும், படுக்கையறையில் குழந்தைகள் ஆராதனா, ஆழியா இருவரும் விஷம் சாப்பிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார், ஆய்வாளர் வெற்றிவேல் அடங்கிய போலீசார் உடலையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அலெக்ஸ் ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள அவரது அம்மாவின் மருத்துவச் செலவு காரணாக ஏற்பட்ட கடன், தம்பியின் தொழிலுக்காக வாங்கி கொடுத்த கடனை திரும்ப கொடுக்க முடியாமல் போனதால் கடன் சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் அலெக்ஸ் புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார். இதற்கான கடன் தவணைத் தொகையை விக்டோரியாவின் தாயாருக்கு வந்த பென்சன் தொகையில் இருந்து கொடுத்து வந்துள்ள நிலையில், விக்டோரியாவின் தாயார் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பென்ஷன் தொகை இல்லாததால் வீட்டிற்கான கடன் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் கடன் சுமை அதிகரித்ததால் தம்பதியினருக்கு மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும... மேலும் பார்க்க

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்ற... மேலும் பார்க்க

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பா... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ம... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க