செய்திகள் :

Kashmir: `ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்' பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியான சோகம்..

post image

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த ஷெல் தாக்கதலால் பூஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில், 12 வயது இரட்டையர்கள், ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரட்டையர்கள் நடைமுறையில் பிரிக்க முடியாதவர்களாக உள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் மண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ரமீஷ், இவரது மனைவி உர்ஷா.

இந்த தம்பதிக்கு, 2014 ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இந்த இரட்டையர்கள் பிறந்தனர். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில், இந்த இரட்டையர்கள் சில நிமிட இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களின் தாய் மாமா `அதில் அடில் பதான்' இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் இது குறித்து கூறுகையில்,

"இரண்டு மாதங்களுக்கு முன்பு ரமீஸ், உர்ஷா கானுடன் இரண்டு குழந்தைகளும் பூஞ்சில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர். மே 7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நான் அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த போது, ​​கடுமையான ஷெல் தாக்குதல் நடந்தது.

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக, நான் அவர்களை வெளியே வரச் சொன்னேன். அவர்கள் வெளியே வந்த நேரத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் இரட்டையர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ரமீஸ்-க்கு காயம் ஏற்பட்டது. நான் மூவரையும் என் வாகனத்தில் ஏற்றி பூஞ்ச் ​​மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சில நிமிட இடைவெளியில் இறந்தனர்" என்று அடில் அங்கு நடந்த தாக்குதல் குறித்து கூறினார்.

ஹைதராபாத் `கராச்சி பேக்கரி'-க்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதா? - உரிமையாளர் சொன்ன பதில்!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி' கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த க... மேலும் பார்க்க

எல்லா மருந்துச் சீட்டுகளிலும் இடம்பெறும் ``RX'' என்ற வார்த்தை.. மருத்துவர்கள் எழுதுவது ஏன்?

மருத்துவர்களின் எழுத்து மொழி பெரும்பாலும் நமக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கும். குறிப்பாக நோயுற்ற நபர்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் உள்ள சுருக்கெழுத்து நமக்கு புரியாத புதிராக இ... மேலும் பார்க்க

ChatGPT: ``வேறு ஒருவருடன் தொடர்பு..'' - Al ஜோதிடத்தை நம்பி கணவரிடம் விவாகரத்து கேட்ட பெண்

மனித வாழ்க்கையில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டாலும், அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தவறான புரிதல்கள் வாழ்கையில் நமக்க... மேலும் பார்க்க

Operation Sindoor: இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து கராச்சியை காலி செய்த தாவூத் இப்ராகிம் கும்பல்!

Operation Sindoor: இந்தியா கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் உய... மேலும் பார்க்க

Indian Army: 'இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்' - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி | Photo Album

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEi... மேலும் பார்க்க

Sindoor: `இப்போது நாட்டுக்காக என் குங்குமத்தை அனுப்புகிறேன்’ - மணமகளின் வைரல் வீடியோவின் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானின், பச்சோரா தாலுகாவில் உள்ள புங்கானைச் சேர்ந்தவர் மனோஜ் தியானேஷ்வர் பாட்டீல். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மே 5 திங்கட்கிழமை பச்சோரா தாலுகாவில் உள்ள கலாம்சாரா கிராமத்... மேலும் பார்க்க